தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை பேசின் பாலம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்! - சென்னை போக்குவரத்து காவல்துறை

சென்னை: மூலக்கொத்தளம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேசின் பாலம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

chennai basin bridge junction
chennai basin bridge junction

By

Published : Aug 1, 2020, 6:58 AM IST

சென்னை மூலக்கொத்தளம் சந்திப்பில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. இதனால் போக்குவரத்து காவலர்கள் இன்று (ஆக.1) முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனைமுறையில் போக்குவரத்து மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

அதாவது பவர் ஹவுஸ் சாலையிலிருந்து மூலக்கொத்தளம் நோக்கி செல்லும் வாகனங்கள், பேசின் பாலம் மையப்பகுதியை அடைந்ததும் இடதுபுறம் திரும்பி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்று வியாசர்பாடி புதிய பாலத்தின் கீழ் வலதுபுறம் திரும்பி மீண்டும் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையை அடைய வேண்டும். அதன்பின் இடதுபுறம் திரும்பி மூலக்கொத்தளம் செல்ல வேண்டும்.

அதேபோல வியாசர்பாடி சர்மா நகர் பகுதிகளிலிருந்து புளியந்தோப்பு செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் கல்லூரி வழியாகச் சென்று புளியந்தோப்பை அடையவேண்டும். இவ்வாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:போக்குவரத்து காவலர்கள் வீடியோ கால் மூலம் கூடுதல் ஆணையரிடம் குறைகளைத் தெரிவிக்கலாம்!

ABOUT THE AUTHOR

...view details