தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சி கடைகளுக்கு ஆறு மாத வாடகை தள்ளுபடி வேண்டும் - விக்கிரமராஜா - கோயம்பேடு சந்தை

சென்னை: கரோனா தொற்று பாதித்து உயிரிழந்த வியாபாரிகளுக்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

union
union

By

Published : Sep 7, 2020, 4:03 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ” திருச்சி, கோவை, வேலூர் உள்ளிட்ட மாநிலம் முழுவதும், முன்பிருந்த இடங்களிலேயே மார்க்கெட்டுகளை திறக்க அனுமதி கேட்டுள்ளோம்.

அதோடு, கரோனா தொற்றால் உயிரிழந்த வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

உள்ளாட்சி கடைகளுக்கு 6 மாத வாடகை தள்ளுபடி வேண்டும் - விக்கிரமராஜா

உள்ளாட்சி, நகராட்சியில் உள்ள கடைகளுக்கு ஆறு மாதங்களுக்கு வாடகையை தள்ளுபடி செய்யவேண்டும். வரும் 18ஆம் தேதி முதல் உணவு தானியக் கடைகளையும், 28ஆம் தேதி முதல் காய்கறி சந்தையையும் கோயம்பேட்டில் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதேபோல் பூ, பழ மார்க்கெட்டையும் திறக்க அனுமதிக்க வேண்டும் “ எனக் கூறினார்.

இதையும் படிங்க: புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details