சென்னை:தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி சென்னை கோயம்பேடு சந்தையில் ஆய்வுசெய்து, வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் வியாபாரிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது வியாபாரிகள், ”காய்கறி அங்காடி வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அப்படியே உணவு தானிய வணிக வளாகத்திற்கும் வந்து கொள்முதல் செய்ய ஏதுவாக காலை மூன்று மணி முதல் உணவு தானிய வளாகம் இயங்க அனுமதிக்க வேண்டும்.
குறிப்பிட்ட பொருளை குறிப்பிடப்பட்டிருக்கும் வளாகத்திற்குள்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டத்திற்கு கட்டுப்படாமல், காய்கறி, கனி அங்காடி வளாகங்களுக்குள் சட்டவிரோதமாக இயங்கும் உணவு தானிய வியாபாரத்தினை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.