எளிமைக்கு பெயர்பெற்ற விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர்.நல்லகண்ணுவின் 96ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், அவருக்கு நேரிலும், தொலைபேசி மூலமும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தோழர். நல்லகண்ணுவுக்கு டி.ஆர்.பாலு நேரில் வாழ்த்து! - தோழர். நல்லகண்ணு பிறந்தநாள்
சென்னை: முன்பு எப்போதும் இருந்ததைவிட இன்றைய காலகட்டத்தில் தோழர். நல்லகண்ணுவின் பணி தமிழகத்திற்கு தேவை என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, தோழர். நல்லகண்ணுவை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் டி.ஆர்.பாலு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ நேர்மையாளர், அய்யா நல்லகண்ணுவின் பணி முன்பு எப்போதும் இருந்ததைவிட இன்றைய காலகட்டத்தில் தமிழகத்திற்கு தேவை. எனவே, நல்ல உடல்நலத்துடனும், உற்சாகத்துடனும் அவர் மென்மேலும் இயக்கப் பணிகளை தொடர வாழ்த்துகிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'தொண்டறமே வாழ்வெனக் கொண்டவர் பெருந்தோழர் நல்லகண்ணு'