தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெரியார் சிலை குறித்து அவதூறாகப்பேசியதாக கனல் கண்ணன் மீது புகார்! - பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசியதாக கனல் கண்ணன் மீது புகார்

ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசிய திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

கண்ணன் மீது புகார்
கண்ணன் மீது புகார்

By

Published : Aug 3, 2022, 7:17 PM IST

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார்.

பின் செய்தியாளர்களைச்சந்தித்த குமரன், 'கடந்த 1ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டுப்பிரிவின் செயலாளரும், ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்க கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் எனப்பேசியுள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அச்சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகள் ஆனநிலையில், தற்பொழுது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது. அதேபோல், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தைத் தூண்டும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்’ எனக் குற்றஞ்சாட்டினார்.

மேலும் அவர், இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல் கண்ணன் பேசியுள்ளதால் அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளதாகக் கூறினார்.

இதையும் படிங்க: புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா;1000 ஆடுகள், 2000 கோழிகள் அறுத்து ஒரு லட்சம் பேருக்கு கறிவிருந்து!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details