தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிசம்பர் 22 தீவுத்திடலில் பொருட்காட்சி: திறந்துவைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கைறார்

சென்னை: சுற்றுலாத் துறை சார்பில் தீவுத்திடலில் நடைபெறவுள்ள பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 22ஆம் தேதி திறந்துவைக்கிறார்.

சென்னை பொருட்காட்சி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கைறார், Tourism department exhibition in chennai
Tourism department exhibition in chennai

By

Published : Dec 20, 2019, 6:16 PM IST

சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாத் துறை சார்பில் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் பொருட்காட்சி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் 28 மாநில அரசுத் துறைகள், 16 மாநில பொதுத் துறை நிறுவனங்கள், இரண்டு மத்திய அரசு நிறுவனங்கள், நான்கு பிற மாநில அரசு நிறுவனங்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தமிழ்நாடு சட்ட உதவி மையம் உள்பட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்காட்சி தொடர்ந்து 70 நாள்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. அலுவலக நாள்களில் மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரையும் விடுமுறை நாள்களில் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையும் பொருட்காட்சியைப் பார்க்க முடியும். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 35 ரூபாயும் சிறுவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

காப்பான் படம் வெளிக்கொணர்ந்த கதை: பூச்சித் தாக்குதல்... உருவானதா? உருவாக்கப்பட்டதா?

இதில் 120 தனியார் கடைகளும் இடம் பெற்றுள்ளன. பெரியவர்கள், சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் பொருட்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள அண்ணா கலையரங்கத்தில் தினந்தோறும் நாட்டியம், நாடகம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுச் சாதனங்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

700 அரங்குகள்; 1 கோடி புத்தகங்கள் - ஜனவரி 9 இல் சென்னை புத்தகக் கண்காட்சி!

சுற்றுலாப் பொருட்காட்சியை 22ஆம் தேதி மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கவுள்ளார். இதில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், செய்தித் துறை இயக்குநர் சங்கர் உள்பட உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details