இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று(டிச.13) புதிதாக 1,195 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 276 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 98 ஆயிரத்து 888ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 7 லட்சத்து 76 ஆயிரத்து 878ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 895ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று கண்டறிய ஈரோடு, திருச்சி, கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக தலா ஒரு ஆர்டிபிசிஆர் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மொத்த ஆய்வகங்களில் எண்ணிக்கை 231ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் புதிதாக 69 ஆயிரத்து 143 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை மாவட்டம்: 2,19,861
- கோயம்புத்தூர் மாவட்டம்: 50,434
- செங்கல்பட்டு மாவட்டம்: 48,720
- திருவள்ளூர் மாவட்டம்: 41,778
- சேலம் மாவட்டம்: 30,773
- காஞ்சிபுரம் மாவட்டம்: 28,160
- கடலூர் மாவட்டம்: 24,432
- மதுரை மாவட்டம்: 20,119
- வேலூர் மாவட்டம்: 19,805
- திருவண்ணாமலை மாவட்டம்: 18,903
- தேனி மாவட்டம்: 16,728
- தஞ்சாவூர் மாவட்டம்: 16,723
- விருதுநகர் மாவட்டம்: 16,122
- கன்னியாகுமரி மாவட்டம்: 16,004
- தூத்துக்குடி மாவட்டம்: 15,867
- ராணிப்பேட்டை மாவட்டம்: 15,759
- திருப்பூர் மாவட்டம்: 16,204
- திருநெல்வேலி மாவட்டம்: 15,046
- விழுப்புரம் மாவட்டம்: 14,787
- திருச்சி மாவட்டம்: 13,744
- ஈரோடு மாவட்டம்: 13,049
- புதுக்கோட்டை மாவட்டம்: 11,269
- கள்ளக்குறிச்சி மாவட்டம்: 10,731
- திருவாரூர் மாவட்டம்: 10,677
- நாமக்கல் மாவட்டம்: 10,783
- திண்டுக்கல் மாவட்டம்: 10,604
- தென்காசி மாவட்டம்: 8,168
- நாகப்பட்டினம் மாவட்டம்: 7,871
- நீலகிரி மாவட்டம்: 7,670
- கிருஷ்ணகிரி மாவட்டம்: 7,634
- திருப்பத்தூர் மாவட்டம்: 7,345
- சிவகங்கை மாவட்டம்: 6,413
- ராமநாதபுரம் மாவட்டம்: 6,258
- தர்மபுரி மாவட்டம்: 6,236
- கரூர் மாவட்டம்: 4,982
- அரியலூர் மாவட்டம்: 4,609
- பெரம்பலூர் மாவட்டம்: 2,250
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 928
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,014
- ரயில் மூலம் வந்தவர்கள்: 428
இதையும் படிங்க:அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடக்கம்!