தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 1,819 பேருக்கு கரோனா - covid positive cases in chennai

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை.24) மேலும் 1,819 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆர்டி பிசிஆர் பரிசோதனை
ஆர்டி பிசிஆர் பரிசோதனை

By

Published : Jul 24, 2021, 10:40 PM IST

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று (ஜூலை.24) மேலும் 1,819 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,583 பேர் குணமடைந்துள்ளனர்; 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 46 ஆயிரத்து 689ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்து 88ஆயிரத்து 775ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் மூன்று கோடியே 63 லட்சத்து 90 ஆயிரத்து 516 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இன்று மட்டும் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 758 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 1,830 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details