தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 575 பேருக்கு கரோனா - total covid cases in chennai

தமிழ்நாட்டில் இன்று மேலும் 575 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

total-covid-cases-in-tamilnadu-on-feb-24-2022
total-covid-cases-in-tamilnadu-on-feb-24-2022

By

Published : Feb 24, 2022, 8:15 PM IST

சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று(பிப்.24) மேலும் 575 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,913 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4 சிகிச்சை பலனின்றி பேர் உயிரிழந்தனர். அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 47 ஆயிரத்து 581ஆக அதிகரித்துள்ளது. அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 144ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 997ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 1350 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக இதுவரை 6 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 284 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 114 பேரக்கும் கோயம்புத்தூரில் 81 பேருக்கும், செங்கல்பட்டில் 66 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 788 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details