தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்...

Top 10 news @3PM
Top 10 news @3PM

By

Published : Nov 2, 2021, 3:16 PM IST

1.வன்னியர் உள் ஒதுக்கீட்டை மீட்காமல் பாமக ஓயாது - ராமதாஸ்

உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் பாமக ஓயாது என்றும்; இதுகுறித்து மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2.புனித் மரணத்திற்குப் பின் மருத்துவமனை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்

சமீபத்தில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததின் தாக்கத்தால், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இதயப் பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் வரிசைகட்டி நிற்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

3.முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : அதிமுக சார்பில் போராட்டம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நவம்பர் 9ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

4.நால்வரின் வாழ்வில் ஒளி பாய்ச்சிய புனித் ராஜ்குமார்!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது கண்கள் மூலம் நான்கு பேரின் பார்வைக் குறைபாடுகள் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பார்வை திரும்பியுள்ளது.

5.பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு - முன்னாள் எஸ்பி, சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு முன்னாள் எஸ்பி, சிறப்பு டிஜிபி ஆஜராகாததால், விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

6.பள்ளி வருகை பதிவேட்டில் சாதி? - சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் சாதி குறிப்பிட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் ஒரே சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் ஒரு பேட்ச்சில் அமர்த்தியதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையானதையடுத்து சென்னை மாநகராட்சி அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

7.'ஜெய் பீம்' பார்த்தேன் கண்கள் குளமானது - கமல்ஹாசன்

சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' படத்தை அப்படக்குழுவினருடன் பார்த்த கமல்ஹாசன் அவர்களை மனதாரப் பாராட்டியுள்ளார்.

8.தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

9.நவ.1-ஐ மொழிவழி தேசியத்தை உறுதி செய்யும் நாளாக அங்கீகரிக்க வேண்டும் - திருமா கோரிக்கை

நவம்பர் ஒன்றாம் தேதியை மொழிவழி தேசியத்தை உறுதிபடுத்துகின்ற நாளாக அங்கீகரிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

10.தீபாவளிக் கொண்டாட்டம்: குழந்தைகளை வெளியில் அழைத்து வரவேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தீபாவளியையொட்டி, பொதுமக்கள் குழந்தைகளை வெளியில் அழைத்து வரவேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details