தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச்சுருக்கம் Top News @ 9 pm

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச்சுருக்கம்..

இரவு 9 மணி செய்திச்சுருக்கம்
இரவு 9 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 18, 2021, 9:40 PM IST

1. தேசிய நல்லாசிரியர் விருது - தமிழ்நாடு ஆசிரியர்கள் 2 பேர் தேர்வு

மத்திய அரசின் 'தேசிய நல்லாசிரியர் விருது'க்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2. சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அலுவலக வளாக கட்டடத்தை இடிக்க உத்தரவு!

சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அலுவலக வளாக கட்டடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

3. அன்று கலைஞர் தொலைக்காட்சி, இன்று ஸ்டாலின் பேருந்து: சட்டப்பேரவையை அசரவைத்த உதயநிதியின் கன்னிப்பேச்சு!

மூன்றாவது நாளாக நடைபெற்ற, பட்ஜெட் மீதான விவாதத்தில், இன்று, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக பேசினார்.

4. தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. பெண்ணின் ஆபாச படத்தை வைத்து மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம்

10 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால், இளம்பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

6. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று (ஆக.18) காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

7. தாலிபான்களின் வாட்ஸ்அப் முடக்கம்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபேஸ்புக் நிறுவனம், தாலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியையும் முடக்கும் முடிவை எடுத்துள்ளது.

8. வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற 14 வயது சிறுமி - சென்னையில் உற்சாக வரவேற்பு

போலாந்து நாட்டில் நடந்த வில்வித்தைப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்ற 14 வயது சிறுமிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

9. லைகா வழக்கில் நடிகர் விஷாலுக்கு வெற்றி!

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

10. மீரா மிதுனின் யூ-ட்யூப் பக்கத்தை முடக்க நடவடிக்கை

நடிகை மீரா மிதுனின் யூ-ட்யூப் பக்கத்தை முடக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், யூ-ட்யூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details