தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 am - இன்றைய முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

11 மணி செய்திச்சுருக்கம்
11 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 13, 2021, 11:18 AM IST

1. மதுரை மீனாட்சி கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் தொடக்கம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் நேற்று (ஜூலை 12) கோலாகலமாகத் தொடங்கியது.

2. பாமக ராமதாஸ் குறித்து முகநூலில் அவதூறு

பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முகநூலில் அவதூறு பரப்பி வரும் நபரைக் கைது செய்ய வலியுறுத்தி மேட்டூர் பாமகவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3. மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 5ஆயிரம் கன அடியாக குறைத்து வெளியேற்றப்படுகிறது.

4. யானை மீது பட்டாசுகளை வீசி எறிந்த வனத்துறையினர்- விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்

வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் சுற்றித்திரியும் பாகுபலி என்ற ஆண் காட்டுயானை மீது வனத்துறையினர் பட்டாசுகளை வீசி எறிந்த சம்பவத்தை விலங்கு நல ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

5. ‘தொடர் விடுப்பு கேட்டு முதலமைச்சருக்கு நளினி மனு' - வழக்கறிஞர் புகழேந்தி தகவல்

தன்னையும், கணவர் முருகனையும் தொடர் விடுப்பில் விடுவிக்கக்கோரி முதலமைச்சருக்கு நளினி மனு அனுப்பியது தொடர்பாக, இந்த வாரம் நாளினியின் தாயார் முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

6. 'பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயில் குடமுழுக்கு விரைவில் நடைபெறும்' - அமைச்சர் சேகர் பாபு

கன்னியாகுமரியிலுள்ள பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயில் குடமுழுக்கு விரைவில் நடைபெறவுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

7. ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் முன்பதிவு தொடக்கம்

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான முன்பதிவு இன்று (ஜூலை 13) முதல் தொடங்குகிறது.

8. மிரட்டும் டெல்டா- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

எதிர்பார்த்ததை விட அதிவேகமாக டெல்டா வகை வைரஸ்கள் பரவிவருகின்றன என உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்தார்.

9. கள்ளிக்காட்டு நாயகனுக்கு 68ஆவது அகவை தினம்

கவிஞர் வைரமுத்து இன்று (ஜூலை 13) தனது 68ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

10. அசுரன் தெலுங்கு ரீமேக் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாரப்பா' நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details