தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - நிவர் புயல்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Nov 26, 2020, 7:36 AM IST

#LiveUpdates கரையை கடந்தது நிவர் புயல்

நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடக்க தொடங்கிய நிவர் புயல் இன்று அதிகாலையில் கரையைக் கடந்தது.

நிவர்: செம்பரம்பாக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் - 2015 மீண்டும் திரும்புகிறதா?

தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு!

ஆவடியில் மழை நீர் கால்வாய் பகுதிகளை கொட்டும் மழையில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.

நிவர் புயல்: 52 நிவாரண முகாமில் 2706 நபர்கள் தங்கியுள்ளனர்

ஆதரவற்றவர்கள், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு மாநகராட்சி ஊழியர்கள், நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 53 நிவாரண முகாமில் 2,706 நபர்கள் தங்கியுள்ளனர்.

நிவர் புயல்: சென்னை விமான நிலையம் மூடல்!

நிவர் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை நிறுத்துவதாக சென்னை விமான நிலையம் ஆணையம் தெரிவித்துள்ளது.

குரூப்-2 நேர்முகத் தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு!

குரூப்-2 நேர்முகத் தேர்வுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் எதிரொலி: யுஜிசி-நெட் தேர்வுகள் ஒத்திவைப்பு!

நிவர் புயல் காரணமாக மழை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

சென்னை காவல் துறையைப் பாராட்டிய முதலமைச்சர்

ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள சென்னை காவல் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மாதவிடாய் பொருள்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு!

உலகில் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பொருள்களை இலவசமாக வழங்கிய முதல் நாடாக ஸ்காட்லாந்து உருவெடுத்துள்ளது.

பிரபல கால்பந்து வீரர் மாரடோனா மரணம்!

பிரபல கால்பந்து வீரர் மாரடோனா மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 60

ABOUT THE AUTHOR

...view details