தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9pm

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்...

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9pm
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9pm

By

Published : Apr 8, 2021, 9:16 PM IST

1.சத்தீஸ்கர்: நக்சல்களால் கடத்தப்பட்ட சிஆர்பிஎப் காவலர் விடுவிப்பு!

ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற பிஜாபூர் நக்சல் தாக்குதலின்போது கடத்தப்பட்ட சிஆர்பிஎப் காவலர் விடுவிக்கப்பட்டார்.

2. ஐபேக் குழுவினரை நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு எண்ணிக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவைச் சென்னையில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

3. ’இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல’ - துரைமுருகன் அறிக்கை

தேர்தல் முடிவடைந்து புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

4. '40 ஆண்டுகால நட்பு' - இறப்பிலும் இணைபிரியாத இந்து-முஸ்லீம் நண்பர்கள்

40 ஆண்டுகளாக இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்த இந்து- முஸ்லீம் நண்பர்கள் ஒரே நாளில் உயிரிழந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5. மகள், மருமகன் எனக் குடும்பத்தோடு கரோனா பாதிப்புக்குள்ளான முதலமைச்சர்!

மகள் வீனா, மருமகன் முகம்மது ரியாஸ் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

6. துபாய்க்கு கடத்தப்படவிருந்த வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

7. தொடர்ந்து மாயமாகும் சுயேச்சை வேட்பாளர்!

புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் பொம்மடி மீண்டும் மாயமாகியுள்ளார்.

8. நடுக்கடலில் 'கர்ணன்' பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள்!

'கர்ணன்' படம் வெளியாவதையொட்டி தனுஷின் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர்.

9. ஓடிடியில் வெளியாகும் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 'யுவரத்னா'

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் - சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'யுவரத்னா' திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

10. வீடு திரும்பிய சச்சின் டெண்டுல்கர்!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையிலிருந்து இன்று (ஏப்.8) வீடு திரும்பினார்.

ABOUT THE AUTHOR

...view details