தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத் 9 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்தி சுருக்கம்...

9 PM
9 PM

By

Published : Jan 28, 2021, 8:45 PM IST

1. 'ஜெ.நினைவிட திறப்பு நிகழ்வையும், சசிகலா விடுதலையையும் ஒரு சேர பார்க்க வேண்டியதில்லை' - கடம்பூர் செ.ராஜு மதுரை: ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்வையும், சசிகலா விடுதலையையும் ஒரு சேர பார்க்க வேண்டியதில்லை என அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்துள்ளார்.

2. சசிகலா உடல்நலம் பெற ஓபிஎஸ் மகன் வாழ்த்து!

சசிகலா கரோனாவிலிருந்து மீண்டு நல்ல உடல்நலத்துடன் அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டிக்கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

3. மாணவர்களுக்குத்தொடரும் ஆன்லைன் கல்வி... அறிவூட்டுகிறதா? அழுத்தம் தருகிறதா? - ஓர் கள ஆய்வு தூத்துக்குடி: கரோனா ஊரடங்கு கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் நேரிடையாக பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று கல்வி கற்ற காலம் மாறி, இணையதளம் மூலமாக மெய்நிகர் வகுப்புகளை கவனிக்கும் அளவுக்கு கல்வித்துறை உருமாற்றம் அடைந்துள்ளது.

4. கலப்பட மருத்துவமுறையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு!

சென்னை: மத்திய அரசு கொண்டுவர உள்ள ஒருங்கிணைந்த கலப்பட மருத்துவ முறையை கைவிட வலியுறுத்தி பிப்ரவரி 1 முதல் 14 ஆம் தேதி வரை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

5. அக்காவிடம் தகராறு செய்த மாமா: தட்டிக்கேட்ட மைத்துனர் கொலை!

சென்னை: வால்பாறை அருகே அக்காவிடம் தகராறு செய்த மாமாவை தட்டிக்கேட்ட மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6. பெண் காப்பகத்தின் மீது பாலியல் புகார்: காப்பாளர் ஏற்கனவே போக்சோவில் கைதுதானவர்... திடுக்கிடும் தகவல்கள்! சென்னை: பெண்கள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த காப்பக உரிமையாளர் ஏற்கனவே போக்சோவில் கைதானது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

7.மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்!

சென்னை: இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

8. கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் பிக்பாஸ் தர்ஷன் - லாஸ்லியா ஜோடி!

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் - லாஸ்லியா ஜோடியாக நடிக்கின்றனர்.

9. தலைக்கவசம் இன்றி பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்!

புதுச்சேரி: தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் நபருக்கு 100 ரூபாயாக இருந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது என்று புதுச்சேரி போக்குவரத்து துறை செயலர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

10. வயநாடு போலீஸ் காவலில் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி

கடந்தாண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை கேரள மாநில காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details