தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news tamil
etv bharat top ten news tamil

By

Published : Dec 11, 2020, 9:20 PM IST

சென்னை:ஈடிவி பாரத் தமிழ்நாட்டின் இரவு 9 மணிக்கான முதன்மைச் செய்திகளை தெரிந்துகொள்ளுங்கள்

1. ஆ.ராசா ரெடியா? நானும் ரெடி? நேரடி விவாதத்திற்கு சவால் விடும் புகழேந்தி!

ஆ.ராசா தயார் என்றால் தொலைக்காட்சியில் ஆதாரங்களுடன் நேருக்கு நேராக அவருடன் விவாதிக்க நான் தயார் என அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

2. தமிழ்நாடு கரோனா நிலவரம்: 1,235 பேர் பாதிப்பு; 1311 பேர் குணம்

தமிழ்நாட்டில் கரோனாவால் 1,235 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடந்து கரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 1,311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

3. மதுரை - போடி அகல ரயில் பாதை: உசிலம்பட்டி - ஆண்டிப்பட்டி வரை சோதனை ஓட்டம்

மதுரை - போடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் உசிலம்பட்டி முதல் ஆண்டிப்பட்டி வரை 21கி.மீ தூரத்திற்கு இன்று (டிச.11) ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.

4. முன்னாள் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறியாளர் கைது!

திருமணமான முன்னாள் காதலியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல மென்பொருள் நிறுவனத்தின் பொறியாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

5. மகாராஷ்டிாவில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு!

மகாராஷ்டிராவில் அரசு அலுவலர்கள் அலுவலகத்திற்கு ஜீன்ஸ், டிசர்ட் அணிந்துவர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

6. பெண் பத்திரிகையாளர் கொலை - பலர் கைது; தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் அதிரடி

ஆப்கானிஸ்தான் பெண் பத்திரிகையாளர் கொலை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

7. போதைப்பொருள் வழக்கு: சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சனா கல்ராணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

8. கரோனாவால் உயிரிழந்த பிரபல இயக்குநர் - ரசிகர்கள் அதிர்ச்சி

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தென்கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி டுக் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

9. இந்திய அணி முன்னாள் கால்பந்து வீரர் எத்திராஜ் காலமானார்

இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் எத்திராஜ் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கால்பந்து சம்மேளனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

10. பியாஜியோ இந்தியா ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 160க்கான முன்பதிவு தொடக்கம்!

இந்திய பயனர்களை கருத்திற்கொண்டு இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட புதிய பியாஜியோ ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 160 ( Aprilia SXR 160) இருசக்கர வாகனத்திற்கான முன்பதிவு அனைத்து விற்பனை முகவர்கள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details