தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @9AM - etvbharat

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 8, 2021, 9:29 AM IST

1. பழவேற்காடு முகத்துவாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஆய்வு

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமையவிருக்கும் பகுதியில் மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

2. மேகதாது அணை விவகாரம் - காங்கிரஸ் கண்டனம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

3. தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்!

ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனுக்கு என்னென்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

4. தாம்பூலத் தட்டோடு மாணவர்களையும் பெற்றோரையும் வரவேற்கும் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள்!

சென்னை: பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், வீடுவீடாகச் சென்று தாம்பூலத் தட்டில் பழங்கள், வெற்றிலை, பாக்குகள் வைத்து, துண்டுப்பிரசுரங்கள் வழங்கி மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

5. 43 புதிய ஒன்றிய அமைச்சர்கள் யார்; அவர்களின் சுயவிவரங்கள் என்ன?

பிரதமர் மோடி 2ஆவது முறையாக பதவி ஏற்றதற்கு பின், ஒன்றிய அமைச்சரவையில் இதுவரை எந்த ஒரு பெரிய மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், 43 பேரை ஒன்றிய அமைச்சர்களாக நியமித்து பட்டியல் வெளியிட்டுள்ளது, ஒன்றிய அரசு. அவர்களைப் பற்றிய விவரங்களைக் காண்போம்.

6. பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை

பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று ஓ. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

7. புதிய ஒன்றிய அமைச்சர்களுக்கு என்னென்ன துறை?

டெல்லி: புதிதாக பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்களுக்கு என்னென்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

8. 'மோகன்தாஸ்' படத்தில் தனது பகுதியை முடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை: விஷ்ணு விஷாலின் 'மோகன்தாஸ்' படத்தில் தனது பகுதியை முடித்துவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

9. படப்பிடிப்புக்கு திரும்பும் உதயநிதி ஸ்டாலின்!

தமிழில் ரீமேக் செய்யப்படும் 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் கலந்துகொள்ளவுள்ளார்.

10. ஜார்க்கண்ட் மாநிலத்தின் அசத்தலான சைவ மட்டன்!

vஜார்க்கண்ட் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் சைவ உணவு காளான்கள் ருகடா, குக்தி என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக, இவைகள் சால் மரத்தின் அடியில் காணப்படும். பருவ மழைக் காலங்களில் அதிகமாக கிடைக்கிறது. இங்குள்ள மக்கள் காடுகளில் இருந்து ருகடா, குக்தியை எடுத்து விற்பனை செய்ய சந்தைக்கு கொண்டு வருகிறார்கள். இதில் நிறைய புரதங்கள் அடங்கியுள்ளன. ருசியிலும் ஆட்டுக்கறி, கோழிக்கறி சுவை கிடைக்கிறது. இது இம்மக்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details