தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @9am - செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 7, 2021, 9:14 AM IST

1. தமிழ்நாடு தடகள வீரர்களுக்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஐந்து தமிழ்நாடு தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத் தொகையாக அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2. ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3. செப்டம்பரில் நீட் தேர்வு - மாணவர்களே தயாராகுங்கள்

கரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட, 2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆன்லைன் மூலம் இல்லாமல் வழக்கம்போல நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

4. மேற்கு கடலோர பகுதியில் மழை அதிகரிக்க வாய்ப்பு

மேற்கு கடலோரப் பகுதியில், ஜூலை 9ஆம் தேதி முதல் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

5. ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் திருட்டு - ஒருவர் கைது!

ஏடிஎம் மையங்களில் தவறவிடும் ஒய்ஃபை கார்டுகள் மூலம் தொடர்ந்து பணம் திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

6. ஜேஇஇ முதன்மை தேர்வுகள் தேதி அறிவிப்பு

மாணவர்களின் நலன் கருதி ஜூலை 20ஆம் தேதி முதல் ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

7. பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்.

8. சியான் 60: இந்தியாவை சுற்றப்போகும் விக்ரம் - துருவ்!

‘கோப்ரா’ பட வேலைகளில் விக்ரம் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கியதும் விக்ரம் அதில் பங்கேற்பார்.

9. யூரோ 2020: இறுதிப்போட்டியில் இத்தாலி; பெனால்டி வரை விறுவிறுப்பு

யூரோ 2020 கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி இத்தாலி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

10. HBD MSD: தோல்வியில் முளைத்தெழுந்த வெற்றியின் தலைவன் தோனி!

இந்தியா அணியின் நிகர் இல்லா கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி ஜூலை 7 தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details