தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @9AM - செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம்..

9 மணி செய்திச்சுருக்கம்
9 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 5, 2021, 9:07 AM IST

1. தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்

கேளிக்கை விடுதிகளில் (Clubs) உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுகள் மற்றும் உணவகங்கள் மட்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

2. தமிழ்நாட்டில் இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதி

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 5) முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.

3. மணப்பாறையில் கனமழை - சாலைகளில் தேங்கிய மழைநீர்

மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது.

4. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஒலி வடிவிலும் பாடம்

கிராமப்புரங்களில் இணைய சேவை குறைவாக உள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒலி வடிவிலான பாடங்கள் பயனுள்ளதாக இருக்கும் என பள்ளிக்கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தமிழ்நாடு முழுவதும் இன்று பேருந்து இயங்கும்!

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை 5) முதல் 50 விழுக்காடுப் பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

6. இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் இயங்க அனுமதி

ஊரடங்கு தளர்வுகள் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, 80 நாள்களுக்குப்பின் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி தந்துள்ளது.

7. ’டெல்லி அரசு vs ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு உள்ள வித்தியாசம்’ - மனிஷ் சிசோடியா

புது டெல்லி: கல்வி உரிமைகள் சட்டத்தின்படி, ஒன்றிய அரசின் கீழ் வரும் மாநகராட்சிப் பள்ளிகள் மாணவர் - ஆசிரியர் விகிதத்தை பராமரிக்கத் தவறிவிட்டதாகவும், டெல்லி அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 98 விழுக்காடாக மாணவர் - ஆசிரியர் விகிதம் உள்ளதாகவும் கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

8. பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் 31 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. மேகா நாயகன் அஸ்வின்!

மேகா நாயகன் அஸ்வின், இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

10. வெள்ளி விழா காணும் பிவி சிந்து!

சர்வதேச பேட்மிண்டன் (இறகு பந்தாட்டம்) அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்த்த பிவி சிந்து இன்று வெள்ளிவிழா காண்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details