தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

செய்திகள்
செய்திகள்

By

Published : Feb 21, 2021, 9:15 AM IST

1.பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை முறியடிப்பாரா நாராயணசாமி?

புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை (பிப்.22) ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்த நிலையில் எம்எல்ஏ-க்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2.'மாநிலத்தின் கடனை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் முதலமைச்சரின் சாதனை' - மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனை என்பது மாநிலத்தின் கடனை ரூ.1 லட்சம் கோடியிலிருந்து ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3.'எடப்பாடி பழனிசாமி ஆட்சி நிச்சயம் கவிழும்': கரூர் எம்பி ஜோதிமணி ஆவேசம்!

கரூர்: எடப்பாடி பழனிசாமி ஆட்சி நிச்சயம் கவிழும் என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

4.நூற்றாண்டு கால வரலாற்றை சுமந்து நிற்கும் ஆல்பர்ட் ஹால்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஆல்பர்ட் ஹால் கட்டடம் நூற்றாண்டு கால வரலாற்றை சுமந்து நிற்கிறது. இதன் அஸ்திவாரம் 1876ஆம் ஆண்டு அரசர் ஆல்பர்ட்டால் போடப்பட்டது. உலகின் பல தனித்துவமான கலைப்பொருள்களை ஒரே இடத்தில் சேமித்துவைக்கும் நோக்கத்தோடு இக்கட்டடம் கட்டப்பட்டது.

5.காதலால் கரோனாவை மறந்த அஜித் பட வில்லன் - போலீஸ் வழக்குப்பதிவு!

மும்பை: கரோனா விதிமுறைகளை மீறியதற்காக நடிகர் விவேக் ஓபராய் மீது மும்பை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

6.'சரித்திரம் மட்டுமே படைப்பேன், பிழை செய்யமாட்டேன்' - நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு தமிழிசை பதில்!

நாகப்பட்டினம்: பிழை செய்யமாட்டேன் என முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலளித்துள்ளார்.

7.பாமக சார்பில் விருப்பமனு பெறுவதற்கான தேதி அறிவிப்பு

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 23ஆம் தேதி முதல் மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8.திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்!

புதுச்சேரி: காரைக்காலில் உள்ள பிரசித்திப் பெற்ற சனி பகவான் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

9.டி20 போட்டிகள்: நடராஜன், வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (பிப்.20) அறிவித்துள்ளது.

10.போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு!

சென்னை: எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 700 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details