தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 News @ 9 PM
Top 10 News @ 9 PM

By

Published : Aug 5, 2021, 9:34 PM IST

1. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நாளை நல்லடக்கம்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

2. டெல்லி சிறுமி விவகாரம்- ராகுல் காந்தி மீது புகார்!

டெல்லி சிறுமி பாலியல் வன்புணர்வு கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

3. அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா நிறைவேற்றம்!

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அடிப்படை பாதுகாப்பு சேவை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

4. பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வோம் - முன்னாள் கேப்டன் தனராஜ் பிள்ளை

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அடுத்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் என இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தனராஜ் பிள்ளை தெரிவித்துள்ளார்.

5. அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கம்

கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

6. டோக்கியோ ஒலிம்பிக்: நடை பந்தயத்தில் சந்தீப் குமாருக்கு 23ஆவது இடம்!

ஒலிம்பிக் நடை பந்தயத்தில் இந்தியாவின் சந்தீப் குமார் 20கி.மீ தூரத்தை 1:25:07 நேரத்தில் கடந்து 23ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

7. சென்னை ஸ்மார்ட் சிட்டி- நகர்ப்புற ஏழைகளுக்கு பயனளிக்கிறதா?

சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் முடிவடைந்த 37 திட்டம் நடுத்தர மக்களுக்கும், மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே உதவிகரமாக உள்ளது என ஐ.ஆர்.சி.டி.யு.சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

8. கரோனா காலத்தில் பணியாற்றாத ஆசிரியர்களுக்கு விருது இல்லை

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதிற்கு கரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்காத ஆசிரியர்களை தேர்வு செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது.

9. ஈமு கோழி நிறுவனம் பணமோசடி வழக்கு: 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பெருந்துறையில் 2012ஆம் ஆண்டு சுதி ஈமூ கோழி நிறுவனம் நடத்தி, ரூ. 2.7 கோடி பணம் மோசடி செய்த வழக்கில் மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டணையும், ரூ. 2.47 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளுள் ஒருவரான யுவராஜ் 'என் மீது எந்தக் குற்றமும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

10. குழந்தையைப் பிரசவித்த மறுநாளே கரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலர்!

குழந்தையைப் பெற்றெடுத்த மறுநாளே, கரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமைக் காவலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details