தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm - ஈடிவி பாரத் இரவு 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்...

ஈடிவி பாரத் இரவு 9 மணி செய்தி சுருக்கம்  Top 10 news @ 9 PM
Top 10 news @ 9 PM

By

Published : Feb 5, 2021, 9:30 PM IST

வாட்ஸ்-அப் தனியுரிமைக் கொள்கைக்கு எதிரான மனு தள்ளுபடி!

வாட்ஸ்-அப் தனியுரிமை கொள்கைக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கி கொள்கை எதிரொலி - பச்சை வண்ணத்தில் மிளிர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!

இன்றைய இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51,000ஐ கடந்து வர்த்தகமானது. வர்த்தக நாள் முடிவில் 117 புள்ளிகள் உயர்வுடன் 50,731ஆக நிறைவடைந்தது.

ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் - சட்ட முன்வடிவை தாக்கல் செய்த அமைச்சர்!

ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட முன்வடிவை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

என்.எல்.சி தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பைத் திட்டமிட்டு பறித்திடும் வகையில் பாரப்பட்சமான முறையில் நடத்தப்பட்டுள்ள என்.எல்.சி நிறுவனப் பணியிடங்களுக்கான தேர்வை பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பழங்குடியினருக்கு சாதிச் சான்று வழங்காதது குறித்த புகார்: தலைமை செயலாளருக்கு சம்மன்!

பழங்குடியினருக்கான சாதிச் சான்று வழங்காதது குறித்த புகாரில் தலைமை செயலாளர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வருவாய் கோட்டாட்சியர்களுக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் 489 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் மேலும் 489 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

ரிவால்டோ யானையின் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவு!

துதிக்கை துளை சுருங்கியதால் பாதிக்கப்பட்ட ரிவால்டோ யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: இ-நாம், எம்எஸ்பி குறித்து மத்திய அரசு விளக்கம்!

பட்ஜெட் கூட்டத்தொடரில், இ-நாம் (மின்னணு தேசிய விவசாய சந்தை) குறித்து எழுப்பப்பட் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

'டெல்லி சாலை அல்ல, நாட்டின் பிற பகுதிகளில் முற்றுகை' - பாரதிய கிசான் சங்கம்

நாளை டெல்லியின் சாலைகளை முற்றுகையிடமாட்டோம் எனவும் மாறாக நாட்டின் பிறபகுதிகளில் சாலைகள் முற்றுகையிடப்படும் என பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

அண்ணாநகரில் 10 இருசக்கர வாகனங்கள் அடித்து உடைப்பு!

அண்ணா நகர் அருகே தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள், 10 இருசக்கர வாகங்களை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து உடைத்துவிட்டு சென்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details