1.’மாஸ்டர் ஆஃப் பொலிட்டிகல் சட்டயர்’ மணிவண்ணன்!
'political satire' என்னும் வார்த்தைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த படம் என்றால் அது மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘அமைதிப் படை’ என யோசிக்காமல் சொல்வார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்!
2. டோக்கியோ ஒலிம்பிக் 9ஆவது நாள்: இந்திய வீரர், விராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் ஒன்பதாவது நாளான இன்று கோல்ஃப், குதிரையேற்றம், தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், ஹாக்கி மாதிரியான விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
3. இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா 2021 - தமிழ்நாட்டு ராணுவ வீரர்களை போற்றி நினைவுப்பரிசு
இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.
4. டோக்கியோ ஒலிம்பிக் 9ஆவது நாள்: எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்திய போட்டியாளர்கள்!
வில்வித்தை வீரர் அதானு காலிறுதிக்கு முன்னேறும்போது, இறகு பந்தாட்டத்தில் பிவி சிந்து ஒலிம்பிக் இறுதிப் போட்டிகளில் தனது இடத்தை உறுதி செய்வார். குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால், தடகள வீரர்களான சீமா புனியா, கமல்பிரீத் கவுர் மற்றும் ஸ்ரீசங்கர் ஆகியோரின் விளையாட்டும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
5. ’சயின்டிஸ்ட்ட கும்பிடுங்கடா’ - மக்கள் இயக்குநர் மணிவண்ணனை நினைவுகூறுவோம்!
”உலகத்தில் இருக்கும் அனைவராலும் தமிழன் ஒடுக்கப்படுறான், அடக்கப்படுறான், உலகம் முழுவதும் தமிழன் சிதறிக் கிடக்குறான், அவனை ஒருங்கிணைக்கும் பாடலாக, எழுச்சி பெறச் செய்யும் பாடலாக இதை நினைக்கிறேன். அதனால் இந்தப் பாடலை கேட்கிறேன்” என சொல்லியிருப்பார் மணிவண்ணன்.