தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 9 AM - இன்றைய முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 28, 2021, 9:31 AM IST

1. கிருஷ்ணகிரி மயிலாடும்பாறை அகழாய்வு - மூன்று கால் சுடுமண் குடுவைகள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக நடைபெறும் அகழாய்வில் மூன்று கால்கள் கொண்ட சுடுமண் குடுவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2. பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் ஆன்லைனில் தொடக்கம்!

ஆகஸ்ட் - டிசம்பரில் நடைபெறும் பருவத்திற்கு பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தவேண்டும் என அறிவித்ததோடு, அதற்கான வகுப்புகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

3. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு எதிராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (ஜூலை 27) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4. பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு: 3ஆவது முறையாக ஸ்டாலின் அரசு உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறை சென்று தற்போது பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு, மூன்றாவது முறையாக 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

5. கரூர் பேருந்து நிலையத்தில் 5 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

கரூர் பேருந்து நிலையத்தில் ஐந்து கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

6. பசவராஜ் பொம்மாய் இன்று பதவியேற்பு

கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மாய் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்.

7. அடுத்தாண்டு தேர்தல்., உ.பி. மீது பாஜக கவனம்!

அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் மீது பாஜக முழு கவனத்தையும் செலுத்திவருகிறது.

8. உத்தரப் பிரதேசத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் நடந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

9. Tokyo Olympics: பி.வி. சிந்து வெற்றி!

ஹாங்காங் வீராங்கனை யி நகன் சியுங் (Yi Ngan Cheung)வை வீழ்த்தினார் பி.வி. சிந்து.

10. தனுஷின் காமன் டிபியை வெளியிட்ட செல்வா

இந்த காமன் டிபியில் தனுஷ் பெற்ற விருதுகளின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனுஷ் கிரேக்கர்கள் போல் உடை அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details