தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @9 AM - etvbharat

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 18, 2021, 9:19 AM IST

1. பொன்னேரியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய எம்எல்ஏ

பொன்னேரியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 28 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர் நேற்று (ஜூலை 17) வழங்கினார்.

2. ஆடி மாத வழிபாடு - தேங்காய் சுடும் விழா

கரூரில் ஆடி மாதம் முதல்நாளை வரவேற்கும் விதமாக தேங்காய் சுடும் விழா காவேரி, அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் நடைபெற்றது.

3. 5 நாள்களில் மட்டும் 1.42 கோடி பெண்கள் இலவசப் பயணம் - ராஜகண்ணப்பன்

முதலமைச்சர் அறிவித்த, மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தின் வாயிலாக, கடந்த ஐந்து நாள்களில் 1.42 கோடி பெண்கள் இலவசமாகப் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

4. கரோனா தடுப்பூசி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் - அமைச்சர் மா.சு.

வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கரோனா தடுப்பூசி குறித்தான வெள்ளை அறிக்கையை வெளியிடத் தயார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5. ’செப்டம்பர் 30க்குள் முதலாம் ஆண்டு படிப்புகளுக்கான சேர்க்கை’ - யுஜிசி உத்தரவு

2021-22 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு படிப்புகளுக்கான சேர்க்கையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், வகுப்புகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

6. இந்திய கடற்படையில் எம்ஹெச் - 60ஆர் ஹெலிகாப்டர்கள்

டெல்லி: அமெரிக்காவிடமிருந்து எம்ஹெச்-60ஆர் (MH-60R Multi Role Helicopters (MRH)) ரக ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படை பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

7. நரைத்த நதியில் வாலிபத்தை வாழவைக்கும் வாலி!

எந்த வெளிநாட்டுக்கும் செல்லாத வாலியால், நியூயார்க் நகரம் உறங்கும் நேரத்தை பாடல் மூலம் எழுப்ப முடியும், வட அமெரிக்காவில் பிறக்கும் மிஸிஸிப்பி நதியை தமிழில் கலக்க முடியும். உசைன் போல்ட்டை தமிழ் பாடல் ரேஸில் நிறுத்தவும் முடியும்.

8. HBD SMRITHI MADHANA: பெண்கள் கிரிக்கெட்டில் ஒளிரும் நட்சத்திரம்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது 25ஆவது பிறந்தநாளை இன்று (ஜூலை 28) கொண்டாடுகிறார்.

9. ஓடிடிக்கு செல்கிறதா நரகாசூரன்?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘நரகாசூரன்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

10. நாக்க முக்க பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ’குட்டி மயில்’ ஜான்வி!

12 ஆண்டுகளுக்கு முன் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான தமிழ் பாடலான ’நாக்க முக்க’ பாடலுக்கு, நடிகை ஜான்வி கபூர் தன் நண்பர்களுடன் நடனமாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details