தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்

9 AM
9 AM

By

Published : Apr 16, 2021, 9:04 AM IST

1. 'மீண்டு'ம் வந்தார் பெரியார் ஈவெரா!

சென்னை: 'பெரியார் ஈவேரா' பெயர் அழிக்கப்பட்ட அதே பலகையின் அதே இடத்தில் மீண்டும் அப்பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் (ஒட்டுவில்லை) ஒட்டப்பட்டுள்ளது.

2. நாள்தோறும் 2 வரி பொன்மொழி தந்த பசுபதிநாதன் மறைவு!

சேலம் மாநகரின் சுவர்களில் இரண்டு வரி பொன்மொழிகளை எழுதி பொதுமக்களிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்திய சமூக செயற்பாட்டாளர் பசுபதிநாதன் காலமானார்.

3. கப்பல் படகு மீது மோதி விபத்து; தூத்துக்குடி மீனவரை மீட்டுத் தரக்கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

மீன்பிடித்து கொண்டிருந்த படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி மாயமான தூத்துக்குடி மீனவரை மீட்டுத் தரக்கோரி அவரின் குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஏப்.15) மனு அளித்தனர்.

4. ஈரோட்டில் கேரள பலாப்பழங்கள் விற்பனை அமோகம்!

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் விற்பனைக்கு குவித்துவைக்கப்பட்டிருந்த கேரள பலாப்பழங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

5. மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

மதுரை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை மத்திய அரசு சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டல மலைப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை தடைவிதிக்கக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

6. வங்கியிலிருந்து வெளியே வந்தவரிடம் ரூ 8 லட்சம் கொள்ளை

பல்லடம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணம் எடுத்து வெளியே வந்தவரிடமிருந்து 8 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த அடையாள தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

7. 30 குண்டுகள் முழங்க மோப்ப நாய்க்கு மரியாதை - துணை ஆணையர் சீனிவாசன் பெருமிதம்

நெல்லையில் 30 குண்டுகள் முழங்க மோப்ப நாய்க்கு மரியாதை செலுத்தி துணை ஆணையர் சீனிவாசன் பெருமிதமடைந்தார்.

8. பெற்ற பிள்ளைகளை கொடுமை செய்து நரபலி கொடுக்கப்போவதாக மிரட்டல்!

ஈரோடு: ரங்கம்பாளையத்தில் பெற்ற பிள்ளைகளை நரபலி கொடுக்க துணிந்த வழக்கில் தொடர்புடைய நால்வரை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

9. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது!

காஞ்சிபுரம்: படப்பை பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த இளைஞரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

10. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்மழை - கவியருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details