ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 Am - எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 Am
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 Am
author img

By

Published : Sep 6, 2020, 9:10 AM IST

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்: பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள் நிகழாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் பெற்றோர்களிடம் கணினி வழி மூலம் குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி நடத்தினார்.

சித்த மருத்துவம்: கரோனாவிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்பிய 148 பேர்!

சேலம்: கரோனாவால் பாதிக்கப்பட்ட 148 பேர் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் பூரண குணமடைந்து அவரவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

செப். 21 முதல் இறுதி பருவத் தேர்வுகள் - சென்னை பல்கலை. அறிவிப்பு

சென்னை : இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்குமென சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரேஷன் அரிசியைக் கடத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது: 2 டன் அரிசி பறிமுதல்

கோவை: நியாயவிலைக் கடை அரிசியை கடத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டு, இரண்டு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பால்கனி வழியாக செல்போன், லேப்டாப் திருட்டு - இருவர் கைது

சென்னை: நள்ளிரவில் வீட்டின் பால்கனி வழியாக செல்போன், லேப்டாப் ஆகியவற்றை திருடியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரியில் அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்க அனுமதி!

புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்க குடியரசுத் தலைவர் அனுமதி அளித்துள்ளதாக கல்வித்துறை செயலர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

பழங்கால பொருள்களை தேடிதேடி தனதாக்கும் கேமரா காதலன்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் அமர் துனந்தா பழைமையான பொருள்களை தேடி புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - ராணுவ வீரர் பலி

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

‘I am a தமிழ் பேசும் இந்தியன்’ - சமூக வலைதளத்தில் பட்டைய கிளப்பும் யுவனின் புதிய அவதாரம்...!

தமிழ் திரை உலகில் பலர் தற்போது இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த ட்ரெண்டில் இறங்கி உள்ளனர்.

ஐபிஎல் 2020: போட்டி அட்டவணை தயார்!

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கும் நிலையில் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாகிறது.

ABOUT THE AUTHOR

...view details