தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7am - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 30, 2021, 6:55 AM IST

1. TokyoOlympics: வில்வித்தை தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி!

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

2. டோக்கியோ ஒலிம்பிக்: முதலிடத்தில் சீனா; 46இல் இந்தியா!

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டி பதக்க பட்டியலில் ஜப்பானை முந்தி 15 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கல பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. ஏழாவது நாள் போட்டியின் முடிவில் பதக்க பட்டியலில் இந்தியா 46ஆவது இடத்தில் உள்ளது.

3.மலேசிய அமைச்சருடன் உரையாடல் - அரசுகளுக்கு பரிந்துரைகள் வழங்குவதாக கமல் உறுதி!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், மலேசிய மனிதவள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணனுடன் இணைய வழி நேரலையில் உரையாடினார்.

4. ராமேஸ்வரம் - பைஸாபாத் இடையே அதிவேக சிறப்பு ரயில் - மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு

ராமேஸ்வரம் - பைஸாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

5. கமலாலயத்தில் அறிவாலய கதிர்கள்: வரவேற்ற அண்ணாமலைக்கு அழைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்வில் பங்கேற்குமாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நேரில் சென்று அழைப்புவிடுத்துள்ளனர் துணை சபாநாயகரும், அரசின் கொறடாவும்.

6. தடுப்பூசி தொடர்பாக முறையான தகவல் இல்லை- பொதுமக்கள் சாலை மறியல்

கருமத்தம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி தொடர்பாக முறையாக தகவல் தெரிவிப்பதில்லை எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7. கலெக்‌ஷன் பணம் சுமார் ரூ.12 லட்சம் திருட்டு - சிக்கிய ஊழியர்கள்!

எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணிக் கடை கண்காணிப்பாளரைத் தாக்கி 11 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

8. சொத்து விவகாரம் - எதிர்தரப்பினருக்கு ஆதரவாக முதியவரை மிரட்டும் போலீஸ்!

அண்ணா நகரில் உள்ள ரூ.14 கோடி மதிப்பிலான சொத்து விவகாரத்தில், தனது சகோதரருக்கு ஆதரவாக காவல்துறையினர் தன்னை மிரட்டுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் புகாரளித்துள்ளார்.

9. டோக்கியோ ஒலிம்பிக் 8ஆம் நாள்: களமாடும் முக்கிய இந்திய வீரர்கள்

ஒலிம்பிக் தொடரின் எட்டாவது இன்று ஜூலை 30இல் இந்தியா சார்பில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள் குறித்த தொகுப்பு.

10. நீங்க தடுப்பூசி போட்டிருக்கீங்களா... பிவிஆர் அறிவித்த அதிரடி ஆஃபர்!

பிவிஆர் சினிமாஸ் அதன் திரையரங்குகள் இன்று (ஜூலை 30) முதல் மீண்டும் திறக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details