தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7am - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 26, 2021, 6:46 AM IST

1. மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு..!

மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் முதுமை காரணமாக நேற்றிரவு (ஜூலை 25) இயற்கை எய்தினார். இன்று (ஜூலை 26) மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

2. போலி நிருபர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட போலி நிருபர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

3. தற்கொலை முயற்சி - குழந்தைகள் உயிரிழப்பு

திம்மாபுரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்ட நிலையில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

4. 'ஒன்றியம்' எனும் வார்த்தையை கூறியே ஒப்பேற்ற எண்ணாதீர்கள் - சீமான்

சென்னை: ‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக்கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மம்தா பானர்ஜியைப் போல உளமார, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

5. தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியில் அரசு கல்லூரி மாணவி

சிறு வயதிலிருந்தே தனது கிரிக்கெட் கனவில் ஆர்வமாக இருந்த அரசு கலைக் கல்லூரி மாணவியான செல்சியா தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

6. நிலச்சரிவு: பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

7. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பிரியா மாலிக்!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

8. Tokyo Olympics: தமிழச்சி பவானி தேவி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக்கின் 4ஆவது நாளான இன்று வாள்வீச்சு போட்டியில் பவானி தேவி முதல் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தனதாக்கினார்.

9. விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!

விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் விஜய்க்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. இதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

10. மூக்கால் ஓவியம் வரைந்த ரசிகர் - சூர்யா நெகிழ்ச்சி!

தனது உருவப் படத்தை மூக்கால் வரைந்த ரசிகருக்கு நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details