தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @7Am - செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 14, 2021, 7:35 AM IST

1. படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் விவரம்

கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களில், எத்தனை பேர் படிப்பைப் பாதியில் கைவிட்டனர் என்ற விவரங்களை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

2. விடுபட்ட கேங்மேன் போராட்டம் எதிரொலி: மின் துறை அமைச்சர் நடவடிக்கை

மின்வாரிய பணிக்குத் தேர்வான கேங்மேன்களின் போராட்ட எதிரொலியாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

3. 'விரைவில் சசிகலா தலைமையில் அதிமுக இயங்கும்'

இரட்டைத் தலைமையின்கீழ் அதிமுக செயல்பட முடியாது. அதிமுக விரைவில் சசிகலா தலைமையின்கீழ் இயங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

4. 'அரசின் மௌனம்... மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறி' - எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு நீண்டகாலமாக மௌனம் காப்பதால் மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

5. கால்நடைகளை நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளைத் தொய்வின்றி செயல்படுத்திடவும், கால்நடை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை செயல்படுத்திடவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

6. 'நீட்டை எதிர்கொள்ளும் நெருக்கடி சூழல் உண்மையில் வருந்தத்தக்கதே!' - ஸ்டாலின்

இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே என முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

7. ராகுல் - பிகே திடீர் சந்திப்பு; அடுத்த வாண வேடிக்கை வட இந்தியாவில்...

தேர்தல் வியூக ஆலோசகரான பிரசாந்த் கிஷார், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியை இன்று (ஜூலை 13) சந்தித்துள்ளார்.

8. கார் இருந்தது; டிரைவருக்கு கொடுக்க காசு இல்லை - கடந்த காலத்தை பகிர்ந்த கரீனா

பிறர் நினைப்பது போல் எங்கள் கபூர் குடும்பம் கடந்த காலத்தில் செல்வ செழிப்பாக வாழவில்லை. எனக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர என் தாயும் அக்காவும் போராடினார்கள். அதிலும் என் தாய் தனி ஆளாக குடும்பத்தை காத்து நின்றார்.

9. கன்னட மொழி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

கன்னட மொழியில் ஒளிபரப்பாகவுள்ள 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார்.

10. 'நவரசா' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

'நவரசா' படத்தில் இடம்பெற்றுள்ள, உசர பறந்து வா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details