தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news@7AM - ETV Bharat

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 4, 2021, 7:14 AM IST

1. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் மறைவு

மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு உள்ளிடோர் அஞ்சலி செலுத்தினர்.

2. 'எதிர்காலம் குறித்த கவலை எனக்கில்லை' - கட்சித் தாவியவுடன் காலரை தூக்கி விட்ட பழனியப்பன்

எதிர் காலத்தைப் பற்றி கவலைப்படாமல், உழைப்பதற்காக மட்டுமே திமுகவில் இணைந்ததாக பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

3. பெருமாள்தான் வேணுமா; முருகன் வேணாமா - சேகர் பாபு குறித்து பணியாளர்கள் ஆதங்கம்!

"பணம் கொடுக்குற பெருமாள் கோயிலுக்கு போறவங்க, இங்க (முருகன் கோயில்) வர யோசிக்கத்தான் செய்வார்கள்" என திருச்செந்தூரில் நடந்த அமைச்சரின் ஆலோசனை கூட்டத்தில் கோயில் பணியாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

4. 'மதுரை எய்ம்ஸ் அடுத்தகட்ட நகர்வு' - ஒன்றிய அமைச்சரிடமிருந்து பதில்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி குமார் விரிவான பதில் அளித்துள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

5. டெங்கு தடுப்பு: மாநகராட்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

வாகனத்தில் எடுத்துச் செல்லும் 69 புகை பரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச் செல்லும் 267 புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 12 சிறிய வகை புகை பரப்பும் இயந்திரங்களை கொண்டு முதிர் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

6. சஞ்சனாவின் தூய அன்புக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்

எம்எல்ஏ உதயநிதியின் புகைப்படத்தை அவருக்கே அன்பளிப்பாக கொடுத்து ஒரு சிறுமி சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.

7. 'லைட் ஹவுஸ் திட்டம்' ட்ரோன் மூலம் பிரதமர் ஆய்வு

டெல்லி: தமிழ்நாடு உள்பட ஆறு மாநிலங்களில் நடைபெற்று வரும் லைட் ஹவுஸ் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை.3) ட்ரோன் கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தார்.

8. மும்பையில் ரூ.300 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

மும்பை: ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக(டிஆர்ஐ) அலுவலர்கள் ரூ.300 கோடி மதிப்புள்ள 290 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

9. அக்னி சிறகுகள்: டப்பிங் முடித்த அருண்விஜய்

நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அக்னி சிறகுகள்' படத்தில் அருண்விஜய் தனது கதாபத்திரத்திற்கு டப்பிங் முடித்து விட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

10. 'வாத்தி கம்மிங்' : ரியாலிட்டி ஷோவில் வெறித்தனம் காட்டிய பாலிவுட் பிரபலங்கள்

பாலிவுட் நட்சத்திரங்களான மாதூரி தீட்சித், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் ரியாலிட்டி ஷோவில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details