தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

Etv Bharat Top 10 news
ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

By

Published : Nov 20, 2020, 7:45 AM IST

அமித் ஷா வருகைக்கு இடையே இன்று அதிமுக ஆலோசனை கூட்டம் - விவாதிக்கப்போவது என்ன?

அதிமுக - தமிழக பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், நாளை(நவ.21) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார். அவரின் வருகைக்கு இடையே இன்று அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் எதை முன்னிலைப்படுத்தி அதிமுக விவாதிக்கவிருக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பட்டியல் தயார் -கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளின் பட்டியல் தயாராக உள்ளது என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை!

நாளை (நவ.21) நடைபெறும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

திருக்குவளையில் சந்திப்போம் - சூறாவளி பரப்புரைக்கு கிளம்பிய உதயநிதி

வருகிற சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளை புறப்பட்டார்.

பட்டியலினத்தவருக்கு சிகை திருத்தம் செய்தவரை ஒதுக்கி வைத்த அவலம்

கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த நபருக்கு சிகை திருத்தம் செய்ததால், சிகை திருத்தம் செய்த கலைஞருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு,அவரின் குடும்பத்தினை ஊரிலிருந்து ஒதுக்கி வைத்த அவல சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தடுப்பு மருந்து முடிவுகள் எதிரொலி: கிடுகிடுவென உயர்ந்த ஃபைஸர் நிறுவன பங்குகள்

ஃபைஸர் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிப்பதாக வெளியான தகவலையடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தது.

Ecodome: சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பாரம்பரியமும் இணைந்த இல்லம்

பென்ஸ்லிமேன் தோட்டத்தில் உள்ள வீடு காண்போர் மனதை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்,மரம்,கற்கள்,வைக்கோல், பிரம்பு உள்ளிட்டவைகளைக் கொண்டு கட்டப்பட்ட இவ்வீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பாரம்பரியமும் நிறைந்தது.

ஒரே நாளில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'வொண்டர் வுமன் 1984'

கேல் கடோட் நடிப்பில் உருவாகியுள்ள 'வொண்டர் வுமன் 1984' ஒரே நாளில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு கரோனா உறுதி!

தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க வீரருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் வைரம் டிராகன் பழம்!

டிராகன் பழங்கள் விவசாயிகளின் வைரம் என்றால் மிகையல்ல. இதனை ஒருமுறை நட்டால் 25 ஆண்டுக்கு பலன் பெறலாம். இதெல்லாம் உங்களுக்கு அசாதாரணமாக தோன்றலாம். ஆனால் உண்மைதான். இதை நாங்கள் கூறவில்லை. டிராகன் சாகுபடியில் பலன் பெற்ற விவசாயிகளே கூறுகின்றனர். விவசாயிகளின் வைரம் டிராகன் பழம்!

ABOUT THE AUTHOR

...view details