தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7am

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @7am
7 மணி செய்தி சுருக்கம்

By

Published : Nov 6, 2020, 7:29 AM IST

கரோனா பாதிப்புக் காரணமாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹிக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதன் காரணமாக அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்!

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்கில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டிற்கான தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்கப்படும் என்று மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கல்லூரிகளைத் திறக்க வழிகாட்டுதல் நெறிமுறை!

கரோனா தளர்வுகளின்படி பொது ஊடரங்குக்குப் பிறகு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களைப் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக மும்முரம் - சேலத்தில் ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடர்பாக திமுக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கேலி செய்தவரை கொலைசெய்த நபர் கைது!

தன்னை கேலி செய்த உறவினரை, கம்பியால் தாக்கி கொலைசெய்த கொலையாளியை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மீண்டும் உங்கள் ஆதரவை வேண்டாதவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்: சிராக் பஸ்வான்

2020 பிகார் தேர்தல் தனது கடைசி தேர்தல் என்ற நிதிஷ் குமாரின் கூற்றுக்கு லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் பதிலளித்தார். அப்போது மீண்டும் தங்களிடம் ஆதரவை கேட்க வராதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களை வலியுறுத்தினார்.

பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை: தீர்ப்பை ஒத்திவைத்த தேசிய பசுமை தீர்ப்பாயம்!

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

“ஸ்டாப் த கவுண்ட்”- சீறும் டொனால்ட் ட்ரம்ப்

ஜனநாய கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற 6 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், “ஸ்டாப் த கவுண்ட்” (எண்ணிக்கையை நிறுத்துங்கள்) என்று அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் சீற்றமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சீனா செல்ல இந்தியர்களுக்குத் தடை!

இந்திய-சீன நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், சீன விசா வைத்துள்ள இந்தியர்களுக்கு அந்நாட்டிற்குச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றில் குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details