தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 pm - சென்னை

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச்சுருக்கம்..

இரவு 7 மணி செய்திச்சுருக்கம்
இரவு 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Oct 6, 2021, 7:32 PM IST

1. பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது ஊழல் வழக்குப்பதிவு

பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் டாடா குழும தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் நேரில் சந்தித்தார்.

3. பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளர் படுகொலை: கரூர் அருகே பரபரப்பு

பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான பிரபல ரவுடி கோபால் அடையாளம் தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4. தேவரியம்பக்கம் வாக்குச்சாவடி வளாகத்தில் தேங்கி நின்ற மழை நீர் - வாக்களிக்கும் விழுக்காடு குறைய வாய்ப்பு

தேவரியம்பக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி வாக்குச்சாவடி வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேக்கமடைந்துள்ளதால், வாக்களிக்கும் விழுக்காடு குறைய வாய்ப்புள்ளது.

5. நெல்லையில் இறுதி கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!

நெல்லையில் இறுதி கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 மணி முதல் 6 மணி வரை வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது வாக்களித்து வருகின்றனர்.

6. எத்தனை முறை வேண்டுமானாலும் கிராம சபை - சென்னை உயர்நீதிமன்றம்

கிராம ஊராட்சிகள் தேவைப்படும்போது எத்தனை முறை வேண்டுமானாலும் கிராம சபைகளைக் கூட்டிக்கொள்ளலாம். அரசிடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. T23 புலியை ஆட்கொல்லி என சொல்ல முடியாது - வன உயிரின பாதுகாவலர்

ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்களே இருக்க முடியும். ஆனால், டி23 புலி மாடுகளையும் வேட்டையாடுவதால் இதை ஆட்கொல்லி புலி என சொல்லிவிட முடியாது என தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

8. இந்திய ஆட்சிப்பணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 4,000 பேர் - குமாரசாமி அதிர்ச்சி தகவல்

ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ளவர்களில் 4,000 பேருக்கு தனியே பயிற்சி அளித்து இந்திய ஆட்சிப்பணியில் அமரவைக்கப்பட்டு இந்துவத்தை திணிப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

9. 2021 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற இருவர்

2021ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10. 'ரௌடி பேபி'... ஹன்சிகாவின் புதிய படம் ஆரம்பம்

நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகும் ரவுடி பேபி படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.5) பூஜையுடன் தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details