தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 PM - சென்னை

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச்சுருக்கம்..

இரவு 7 மணி செய்திச்சுருக்கம்
இரவு 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 10, 2021, 7:07 PM IST

1. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2. சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவரை விடுதலை செய்த மகளிர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

3. மகன் கையால் தாலி வாங்கி மறுமணம் செய்து கொண்ட பேராசிரியை!

கல்லூரி பேராசிரியை ஒருவர் தன்னுடைய எட்டு வயது மகனின் கையால் தாலியைப் பெற்று புதிய மணமகனை ஏற்று மறுமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது.

4. வனத்தின் பரப்பளவு உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் ராமச்சந்திரன்

தமிழ்நாட்டில் வனத்தின் பரப்பளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

5. பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடுவிழா - ப.சிதம்பரம் கண்டனம்

70 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்த முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

6. ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

உலக பிரசித்தி பெற்ற புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன.

7. தடுப்பூசி போடவில்லை என்றால் கட்டாய விடுமுறை - அரசு ஊழியர்களுக்கு செக்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் செப்டெம்பர் 15ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

8. கோவிட்-19 நிலவரம் - பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டின் கோவிட்-19 நிலவரம், தடுப்பூசி திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

9. நடிகர் விவேக் மரணம்: ஒன்றிய அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம்

நடிகர் விவேக் மரணம் குறித்து எட்டு வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரத் துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

10. அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ...

‘அண்ணாத்த’ டைட்டிலுக்கு மாஸான இசையை தந்த இமான்; மோஷன் போஸ்டருக்கு பக்கா மாஸான இசையை கொடுத்திருக்கிறார். மோஷன் போஸ்டர் மிரட்டலாக இருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details