தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - சென்னை

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச்சுருக்கத்தைக் காணலாம்.

இரவு 7 மணி செய்திச்சுருக்கம்
இரவு 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Sep 3, 2021, 7:15 PM IST

1. சிவசங்கர் பாபாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: பக்தர்களின் போராட்டத்தால் பரபரப்பு

15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவசங்கர் பாபாவை விடுதலை செய்யுமாறு, அவரது பக்தர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

2. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: செப். 17இல் முக்கிய உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 16 குற்றவியல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

3. ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73% அளவுக்கு சொத்துக்குவிப்பு - தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 விழுக்காடு அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார் எனவும், அதுகுறித்த மேல் விசாரணை நடந்து வருகிறது என்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

4. மணலில் வ.உ.சி.யின் உருவத்தை வரைந்து அசத்திய சிறுமிகள்

வ.உ.சி.யின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவத்தை மணலில் இரண்டு சிறுமிகள் வரைந்து அசத்தியுள்ளனர்.

5. கோடநாடு வழக்கில் இபிஎஸ், சசிகலாவை விசாரிக்கக் கோரிய மனு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வி.கே. சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் 2022; ஷிரோமணி அகாலிதளம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஷிரோமணி அகாலிதளம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

7. ஆசிய அளவில் 150 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸை கடந்த விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனைக் கடந்துள்ளது. ஆசிய அளவில் இவரே முதலிடத்தில் உள்ளார்.

8. TOKYO PARALYMPICS: வில்வித்தையில் வெண்கலம் வென்றார் ஹர்விந்தர் சிங்!

பாரா ஒலிம்பிக் வில்வித்தை ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்று, வில்வித்தையில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

9. கூகுள் பே செயலியில் நிலையான வைப்புத்தொகை சேவை அறிமுகம்

எக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியுடன் கூகுள் நிறுவனம் கூட்டணி அமைத்து தனது கூகுள் பே செயலி (Google Pay) நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

10. தொடர்ந்து குறிவைக்கப்படுகிறாரா நடிகர் சித்தார்த்

தான் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு, அச்செய்திகளைப் பரப்பியவர்களைக் கண்டித்து, நடிகர் சித்தார்த் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details