தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச்சுருக்கம்...

இரவு 7 மணி செய்திச்சுருக்கம்
இரவு 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 17, 2021, 7:05 PM IST

1. பள்ளிகள் திறக்கப்படுமா; இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து, முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2. திமுகவை சாடிய ஜி.கே.வாசன் - கேஸ் விலை கேள்விக்கு ஓட்டம்!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிமுக, பாஜகவை குறை கூறியே திமுக அரசு தப்பித்து வருவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டி உள்ளார்.

3. திராவிடச் சிறுத்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - முதலமைச்சர்

மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவனுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, முதலமைச்சருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

4. மாநிலங்களவை தேர்தல்: முன்னதாக முடிவடைகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!

மாநிலங்களவை தேர்தல் பணி காரணமாக, தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு வாரம் முன்னதாக செப்டம்பர் 13ஆம் தேதியே நிறைவுபெறும் என சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

5. ’எழுவர் விடுதலை குறித்து எங்களால் முடிவெடுக்க முடியாது’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரன் தன்னை விரைந்து விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுவை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

6. 'கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்' - தமிழ்நாடு அரசு

கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

7. ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆலயம் எழுப்பிய எம்எல்ஏ!

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஸ்ரீகாளகஸ்தி அருகே உள்ளூர் எம்எல்ஏ பியாப்பு மதுசூதன ரெட்டி ஜெகன்மோகனுக்கு ஆலயம் எழுப்பியுள்ளார்.

8. ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

நாட்டில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 437 ஆக பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.

9. தன் மீதான பிம்பத்தை உடைக்க முயல்கிறதா தாலிபன்?

தாலிபன்கள் என்றாலே மத அடிப்படைவாதிகள், பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிம்பத்தை உடைக்க தாலிபன்கள் முயற்சிப்பதாக கூறுகிறார் அரூனிம் புயான்.

10. உதயநிதி இனிமேல் 'மக்கள் அன்பன்' - சீனு ராமசாமி

இயக்குநர் சீனு ராமசாமி நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு 'மக்கள் அன்பன்' என்ற பட்டத்தை சூட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details