தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - இன்றைய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

காலை 7 மணி செய்தி சுருக்கம்
Top 10 News @7PM

By

Published : Dec 16, 2021, 6:56 AM IST

நைஜீரியாவிலிருந்து தமிழ்நாடு வந்தவருக்கு ஒமைக்ரான் உறுதி

நைஜீரியாவிலிருந்து தமிழ்நாடு வந்தவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் உள்ளனவா என்பதை அறிய, அவர்களது மரபணு பரிசோதனை முடிவுகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என பெங்களூரு ஆய்வகத்திடம் கேட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதில் ஒருவருக்கு தற்போது ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 8 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று? - அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் ஒருவருக்கு உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு தொற்று உறுதியாக வாய்ப்புள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"கனிமவளத் துறையில் எந்த ஒரு குறையுமில்லை..!":இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி

கனிமவளத்தில் எந்தக் குறையுமில்லாமல் இருக்கும் நிலையில், ஆட்சியைக் கறைப்படுத்த எடப்பாடி பழனிசாமி பேசிவருவதாக துரைமுருகன் பதிலடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு மீண்டும் தேர்வு

திமுக ஆட்சியிலும் ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித் தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் ஊரடங்கு ரத்து!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகளை முன்னிட்டு புதுச்சேரியில் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனியில் படப்பிடிப்பு தளத்தில் யோகி பாபு உதவியாளர்களுக்குள் தகராறு - போலீஸ் விசாரணை

காமெடி நடிகர் யோகிபாபு நடித்துவரும் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் அவரது உதவியாளர்களுக்குள் ஏற்பட்ட மோதல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

வள்ளுவக்குடி விஏஓ பணி மாற்றத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளுவக்குடி கிராம நிர்வாக அலுவலர் பணி மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சமூகநீதிப் படங்கள் வணிக ரீதியாக வெற்றி - சத்யராஜ் பெருமிதம்

பெரியார், அம்பேத்கர் சித்தாந்தங்களுடைய சமூகநீதிப் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுகின்றன என சத்யராஜ் பெருமைப்பட பேசியுள்ளார்.

எதற்கும் துணிந்தவன் முதல் பாடல் வெளியானது!

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில்,நடிகர் சூரியா நடிப்பில் வெளிவரயிருக்கும் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று மாலை வெளியாகியுள்ளது.

Palani Pnachamirtham: பழனி பஞ்சாமிர்தத்திற்கு சிறப்பு அஞ்சல் உரை வெளியீடு

உலகப் பிரசித்திப் பெற்ற பழனி கோயில் பஞ்சாமிர்தத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், பழனி பஞ்சாமிர்தத்திற்கு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details