தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @7 AM - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 19, 2021, 7:02 AM IST

1. 'ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுங்கள்' - ஓ.எஸ். மணியன்

அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த 250 பேரிடம், தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுங்கள் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

2. அனுமதிக்கு பிறகே நன்மங்கலம் மெட்ரோ திட்டத்தை தொடங்க வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகே நன்மங்கலம் வனப்பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

3. வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில், உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

4. 'திருமண மண்டபங்களிடமிருந்து ரூ.2,08,600 வசூல்' - சென்னை மாநகராட்சி

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 54 திருமண மண்டபங்களுக்கு இதுவரை ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

5. பஞ்சாப் காங்., தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

6. தானிஷ் சித்திக் உடல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் அடக்கம்

பயங்கரவாதிகள் தாக்குதலின் இடையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக்கின் உடல் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக்கத்தின் இடுகாட்டில் புதைக்கப்பட இருக்கிறது.

7. 'என்னுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் தரணும்' - ம.பி., அமைச்சர் அறிவிப்பு

என்னுடன் செல்ஃபி எடுக்க, 100 ரூபாய் தர வேண்டுமென மத்தியப்பிரதேச அமைச்சர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

8. IND vs SL: எளிதாக வென்றது தவான்&கோ; இலங்கையில் தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான், இஷான் அபார அரைசதத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

9. ’அவர் படங்களை என்னால் இன்றுவரை பார்க்க முடியவில்லை’ - இர்ஃபான் மனைவி வேதனை!

இர்ஃபான் கான் உயிரிழந்து ஓராண்டுக்கு மேலாகியும் அவரது படங்களை இன்றளவும் தன்னால் பார்க்க முடியவில்லை என இர்ஃபான் கானின் மனைவி சுதாபா சிக்தர் கனத்த மனதுடன் தெரிவித்துள்ளார்.

10. இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் ’ராஜேஷ் கண்ணா’ நினைவு நாள்!

இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும், முதல் ட்ரீம் பாய் என்றும் அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது மகள் ட்விங்கிள் கண்ணா அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details