தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 AM - tamil news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 9, 2021, 7:29 AM IST

Updated : Jul 9, 2021, 11:58 AM IST

1. கீழடி அகழாய்வில் சுடுமண் பாசி மணிகள்!

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் சுடுமண் பாசி மணிகள், கண்ணாடி பாசி மணிகள் ஆகியவை நேற்று (ஜூலை.08) கண்டெடுக்கப்பட்டன.

2. ஒன்றிய அமைச்சர் பதவி தமிழ்நாட்டிற்கு கிடைத்தது மகிழ்ச்சி - திருநாவுக்கரசர் எம்.பி

ஒன்றிய அமைச்சர் பதவி தமிழ்நாட்டிற்கு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், தமிழ்நாடு நலனுக்காக அவர் பாடுபட வேண்டும் எனவும் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

3. நீட் பாதிப்பு ஆய்வுக் குழு - வரம்பை மீறிய செயல்

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்தது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஜூலை 8) ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

4. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. சென்னை ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்ரண்டீஸ் பணியாளர்கள்

மெக்கானிக், எலக்ட்ரீசியன் போன்றப் பணிகளில் ஏற்கெனவே பயிற்சி பெற்ற நபர்களுக்கு (apprentice) நிரந்தரப் பணி வழங்க வலியுறுத்தி, சென்னை ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.

6. உணவு கொடுத்த மூதாட்டி படுத்த படுக்கையில் இருக்கையில் வந்து ஆரத்தழுவிய குரங்கு

குரங்கு ஒன்று, தனக்கு உணவு கொடுத்த மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையில் கிடக்கும் நிலையில் அவரைச் சந்தித்து கட்டி அணைத்துவிட்டுச் செல்லும் காணொலி காண்போரை நெகிழ்ச்சிபடுத்தியுள்ளது.

7. காஷ்மீர் என்கவுன்டர்: ஒரேநாளில் சுட்டு வீழ்த்தப்பட்ட 5 பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டர் தாக்குதலில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

8. ’தடுப்பூசியால் மீண்டும் பார்வை கிடைத்தது’ - மகாராஷ்டிராவில் பரவும் புரளி!

மகாராஷ்டிராவில் 70 வயது பாட்டி ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தனக்கு மீண்டும் பார்வை கிடைத்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

9. இளம் ரசிகருடன் அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

நடிகர் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் புது திரைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

10. அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'வாழ்' திரைப்படம் இம்மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Last Updated : Jul 9, 2021, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details