தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - காலை 7 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்

7 AM
7 AM

By

Published : Apr 20, 2021, 6:58 AM IST

1. கரோனா தடுப்பு விதிமுறைகள்: வணிகர்களிடம் காவல் துறையினர் எடுத்துரைப்பு

சென்னை: கரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து வணிகர்களிடம் காவல் துறையினர் எடுத்துரைத்தனர்.

2. கரோனா இரண்டாம் அலை: மருத்துவர்களுடன் பிரதமர் ஆலோசனை!

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வீரியமாக இருந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், சிகிச்சை முறை குறித்தும் காணொலி காட்சி வாயிலாக மருத்துவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

3. மெட்ரோ பயணிகளே நினைவிருக்கட்டும் - நேரம் மாத்தியாச்சு!

இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு மெட்ரோ ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

4. மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த வல்லபாய் பட்டேல் கோவிட் மருத்துவமனை

டெல்லி: சர்தார் வல்லபாய் பட்டேல் கோவிட் மருத்துவமனை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

5. பாண்டவர்களின் மந்திரத் திரி மரம்

கர்நாடக மாநிலம் எலந்தூர் தாலுகாவில் உள்ள பிலிகிரி ரங்கா வனப்பகுதியில் ஒரு அழகிய மரம் உள்ளது. இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால், மரத்தின் மொட்டுகள், கிளைகளில் எண்ணெய் தடவினால் திரிபோல அணையாமல் எரியும். அப்பகுதி மக்கள் இதனை மந்திர மரம் என்று கூறுகிறார்கள்.

6. சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு!

கரோனா தாக்கம் அதிகரித்துவருவதாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7. கடவுளின் தேசத்து இரவுக்கு பூட்டு!

கேரள மாநிலத்தில் கோவிட்-19 தாக்கம் அதிகரித்து வருவதால், இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஏப். 20) இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

8. மாஸ்க் இருந்தால் கணவருக்கு எப்படி முத்தம் கொடுப்பது! டெல்லியில் காவலர்களிடம் ஜோடி வாக்குவாதம்

டெல்லி: காரில் முகக்கவசம் அணியாமல் வந்ததால் காவல் துறையினர் நிறுத்தியபோது அவர்களிடம் கணவன் மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

9. IPL 2021 CSK vs RR: ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை: ஐபிஎல் 2021, 12ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

10. காணுங்கள்: வெடித்து சிதறிய பை! கொண்டு சென்றவர் கதி என்ன?

பஞ்சாபின் அம்லோ மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வெடிபொருள்கள் தயார் செய்யும் மூலப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டது. இது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details