தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM - chennai district

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 News @ 5PM
Top 10 News @ 5PM

By

Published : Nov 6, 2021, 5:30 PM IST

1.4 கால் பிராணி போல் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் யார்? - டிடிவி தினகரன்

அதிமுகவை மீட்பதே எங்களின் லட்சியம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நான்கு கால் பிராணி போல தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

2.நீட் தேர்வு - பெற்றோர் அழுத்தம் தருவதாக மாணவர்கள் வேதனை

பெற்றோர்கள் அழுத்தம் கொடுப்பதாக நீட்தேர்வு கவுன்சிலிங் போது சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் தெரிவித்துள்ளது மிகுந்த வருத்தம் அளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3.பொள்ளாச்சி அருகே மரம் விழுந்து ஒருவர் பலி

பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் அருகே மரம் விழுந்து ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4.கருணாநிதி நினைவிடம்: விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவிட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

5.ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக மாநில பகுதிகள் மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று(நவ.05) திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது.

6.ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக் கொலை - 4 பேர் கைது

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினர் நான்கு பேரை கைது செய்தனர்.

7.தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் போலி நகைகள் மூலம் மோசடி

தனியார் நகைக் கடன் வழங்கும் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8.கால்வாயில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

சென்னை கன்னிகாபுரம் அருகே பக்கிங்காம் கால்வாயை சுத்தம் செய்ய சென்ற முதியவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

9.முதலமைச்சருக்கு பரிசளித்த காவலர்கள்; ஒரு நாள் விடுமுறைக்கு நன்றி

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்ததற்காக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறையினர் பரிசளித்து தங்களின் நன்றி தெரிவித்தனர்.

10.கோவர்தன் பூஜை: 8 முறை சவுக்கடி வாங்கிய சத்தீஸ்கர் முதலமைச்சர்

பாரம்பரிய கோவர்தன் பூஜையின் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சாட்டையால் அடிவாங்கியுள்ளார். அந்த காணொலி இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. மாநிலம் செழிப்பு, வளம் பெற வேண்டி, இதுபோன்ற வழிபாட்டை அவர் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details