தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM - tamilnadu news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 News @ 5PM
Top 10 News @ 5PM

By

Published : Nov 4, 2021, 5:33 PM IST

1.'ஒரு முறை கூட நேரில் பார்த்ததில்லை' - புனித் நினைவிடத்தில் விஜய்சேதுபதி அஞ்சலி

நடிகர் புனித் ராஜ்குமாரோடு போனில் பேசியுள்ளதாகவும், ஆனால் நேரில் பார்க்கவில்லை என்ற வருத்தம் உள்ளதாகவும் நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

2.பழங்குடியின பெண் அஸ்வினி வீட்டிற்கு விசிட் அடித்த முதலமைச்சர்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

3.புதுச்சேரியில் மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது - ஏன் தெரியுமா?

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி இன்று 7 ரூபாய் குறைந்தது.

4.நெல்லையில் கனமழை: குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்தது வெள்ளம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை ஆற்று வெள்ள நீர் சூழ்ந்து செல்கிறது.

5.உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை: இது தீபாவளி அதிரடி

உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி கொட்டும் மழையில் இரண்டு மணி நேரத்தில் ரூபாய் மூன்று கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

6.குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7.கனவு கன்னி திரிஷாவுக்கு 'கோல்டன் விசா

தமிழ் திரைப்பட நடிகை திரிஷா கோல்டன் விசாவை பெற்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

8.தீபாவளி - தயார் நிலையில் தீயணைப்பு துறை!

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் தீ விபத்துகளை தடுக்கும் விதமாக 351 தீயணைப்பு நிலையங்கள் மற்றும் மூன்று மீட்பு நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன.

9.உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் - வெளியானது ரேஷனில் கூடுதல் பொருட்கள் குறித்த அறிவிப்பு!

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் ஏழை மக்களுக்கு கூடுதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

10.உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் தூத்துக்குடி முனைவர் - கிளம்பிய புது நம்பிக்கை

ஸ்டன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட உலகில் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் தூத்துக்குடி முனைவர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details