தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @5pm

ஈடிவி பாரத் 5 மணி செய்தி சுருக்கம்

Etv Bharat Top 10 news
ஈடிவி பாரத் செய்தி சுருக்கம்

By

Published : Dec 25, 2020, 5:16 PM IST

புதுதோற்றத்தில் நடிகர் பிரசாந்த்; ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து!

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக நடிகர் பிரசாந்த்தின் புதிய படத்தின் அவுட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

'மூன்று, நான்கு என எத்தனை அணி வந்தாலும் எங்களுக்கு பயமில்லை'- கே. பாலகிருஷ்ணன்

மூன்றாவது அணி, நான்காவது என எத்தனை அணி வந்தாலும் எங்கள் அணியை வெல்ல முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அலையில் சிக்கி உயிருக்கு போராடிய மாணவன் மீட்பு! மற்றொருவரை தேடும் பணி தீவிரம்!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கடல் அலையில் சிக்கிய ஒரு மாணவர் மீட்பு. இன்னொரு மாணவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உலகளவில் கவனம் ஈர்க்கும் கோவாக்சின் தடுப்பூசி!

கரோனாவிற்கு எதிரான இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

கையில் இருந்த செல்போனை பிடுங்கிச் சென்ற திருடர்கள்!

கோவை: ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி அருகே சாலையில், சிறுவன் கையில் இருந்த செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர்.

நிலத் தகராறு: ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்!

பாஜக-வைச் சேர்ந்தவர் தனது நிலத்தை சொந்தம் கொண்டாடுவதாக கூறி ஆட்டோ ஓட்டுநர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சித்தார்.

அதிமுக- பாஜக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டியது போல சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அரியலூர் சுற்றுப்பயணத்தின்போது தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு!

கிறிஸ்தும‌ஸ் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கான‌லில் குவிந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளின் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் இருந்து வந்த 5 பேருக்கு கரோனா: உருமாற்றமடைந்த வைரஸா என ஆய்வு - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்த வைரஸா என அறிய ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது. ம க்கள் பதட்டமடையாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் , ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐபிஎல் தொடரில் தான் புவி களமிறங்குவார்?

காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய புவனேஷ்வர் குமார், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில்தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கோவிட்-19 நிலவரம்: உலகளில் 7.90 கோடியை தாண்டிய பாதிப்பு!

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் ஆறு லட்சத்து 95 ஆயிரத்து 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details