தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - முதலமைச்சர் பழனிசாமி

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @ 5 PM
Top 10 news @ 5 PM

By

Published : Jul 15, 2020, 5:09 PM IST

இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி!

டெல்லி: இன்று நடைபெறும் இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

விசா விவகாரம்: 'ட்ரம்பை ஒரு பொருட்டாகக் கருதாத இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை மணி'

மூத்தப் பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுடனான நேர்காணலில், ஸ்டோனி புரூக் ஊடகப் பள்ளியில் டிஜிட்டல் இனோவேஷன் துறையின் பேராசிரியர் ஸ்ரீ ஸ்ரீநிவாசன், குடியேற்றக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ட்ரம்பை ஒரு பொருட்டாகக் கருதாத வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை மணியாக விடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு குறைய மக்கள் ஒத்துழைப்பு தேவை - முதலமைச்சர் பழனிசாமி

தமிழ்நாட்டில் 10 நாட்களில் கரோனா பாதிப்பு குறையும்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக வேண்டும்

வீடு திரும்பிய அமைச்சர் அன்பழகன்!

சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அமைச்சர் அன்பழகன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

முன்னாள் ராணுவ வீரர்களும் பேஸ்புக் பயன்படுத்தத் தடை விதிப்பு!

டெல்லி: பேஸ்புக் உள்ளிட்ட பல சீன செயலிகளை பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது முன்னாள் ராணுவ வீரர்களும் பயன்படுத்தத் தடை விதித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சுயஉதவிக் குழுக்களைக் கட்டாயப்படுத்தும் கடன் நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு!

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்தும் சிறு கடன் நிறுவனங்களுக்கு எதிராகப் புகார் அளிக்க மாவட்ட வாரியாக தனி அலுவலர்களை நியமிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசும், ரிசர்வ் வங்கியும் நான்கு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘முருகன், நளினியை உறவினர்களுடன் பேச வைக்க தமிழ்நாடு அரசிற்கு அதிகாரம் இல்லை’

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் ஆகியோரைப் பேச அனுமதியளிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நடிகை வனிதா மீது புகார் அளித்த சூர்யா தேவி!

சென்னை: கஞ்சா வியாபாரி என அவதூறான கருத்துகளைப் பரப்பி வருவதாக, நடிகை வனிதா மீது சூர்யா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கணிதத்தில் கணினி தவறு செய்கிறது வெளியான 'சகுந்தலா தேவி'யின் ட்ரெய்லர்

வித்யாபாலன் நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலா தேவி' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

அசைத்துப் பார்க்க நினைக்காதீர்கள் ஆடி போவீர்கள் - இயக்குநர் கௌரவ் நாராயணன்

சென்னை: மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தயவுசெய்து கலவரத்தை ஏற்படுத்தாதீர்கள் என இயக்குநர் கௌரவ் நாராயணன் கந்தசஷ்டி விவகாரம் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details