தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்...

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 15, 2021, 5:11 PM IST

1. ’தமிழ்நாட்டில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது’ - மு.க. ஸ்டாலின்

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

2. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி: மழை எச்சரிக்கை..!

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் நாளை முதல் (ஆக16) வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதிவரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. மீரா மிதுனுக்கு கரோனா பரிசோதனை...

நடிகை மீரா மிதுன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து கரோனா பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

4. இருளர் இன குழந்தைகளின் சுதந்திர தின ஆசை - நேரில் வந்து கொடியேற்றி உற்சாகப்படுத்திய முன்னாள் எம்.எல்.ஏ

இருளர் இன மக்கள் கொண்டாடிய 75ஆவது சுதந்திர தினவிழாவில் பென்னாகரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் கலந்து கொண்டார்.

5. ஏழைகளுக்கு 100% வீட்டுவசதி - மோடி அறிவிப்பு

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

6. காபூலைச் சுற்றி வளைத்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத் தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

7. சுதந்திரப் போராட்ட வரலாற்றை காட்சிப்படுத்திய தமிழ் படங்கள்!

இன்று நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கலைகள் மூலம் சுதந்திர தாகம் விதைக்கப்பட்ட நாட்டில், சுதந்திரம் பெற்ற பிறகு, போராட்ட வரலாற்றின் சொல்லப்பட்ட, சொல்லப்படாத பல கதைகளும் கலைத்துறையான சினிமாவில் பதிவு செய்யப்பட்டன.

8. இயல், இசை, நாடக மன்றத் தலைவராக வாகை சந்திரசேகர் தேர்வு!

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகரனை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

9. ’வழக்கறிஞர் வந்தால்தான் பேசுவேன்’ - வாக்குவாதத்தில் மீரா

சென்னை அழைத்துவரப்பட்ட மீரா மிதுன் தன்னுடைய வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

10. துக்க நாள்: தோனி ஓய்வு பெற்று ஓராண்டு நிறைவு!

இந்திய நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வேதச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details