தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 11, 2021, 5:09 PM IST

1. 'பள்ளிகளைத் திறக்க தயாராகி வருகிறோம்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: சுகாதாரத்துறை தமிழ்நாடு முதலமைச்சரிடம் கூறிய ஆலோசனையின்படி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை - வானதி சீனிவாசன்

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியதாக கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

3. எம்பிஏ,எம்சிஏ படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பம்

எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலை பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் இன்று(ஆகஸ்ட்11) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

4. பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டல விவகாரம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட 2,900 ஏக்கர் நிலத்தை மீட்க கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5. ’மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினம், இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6. கோவிஷீல்டு - கோவாக்சின் கலவை குறித்த ஆய்வுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!

கரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் டோஸ்களை கலந்து உபயோகிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு இந்த ஆய்வுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. இமாச்சலில் மீண்டும் நிலச்சரிவு - 40 பேர் மரணம் ?

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

8. உள்நாட்டு போர் - ஆப்கானிலிருந்து நாடு திரும்பிய இந்தியர்கள்

உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அலுவலர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

9. இங்கிலாந்து-இந்தியா: இரண்டு புள்ளிகளை பறித்தது ஐசிசி!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இரு அணிகளும் தலா இரண்டு ஓவர்களை குறைவாக வீசிய காரணத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் இரண்டு குறைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

10. புதிய பிஸ்தாவுக்கு கே.எஸ். ரவிக்குமார் வரவேற்பு!

மெட்ரோ ஷிரிஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிஸ்தா’ படத்தின் டீஸர் வெளியானதற்கு கே.எஸ். ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details