தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM - Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

மாலை 5 மணி செய்தி
மாலை 5 மணி செய்தி

By

Published : Mar 24, 2021, 5:28 PM IST

1. தமிழ்நாட்டில் பரப்புரையைத் தொடங்கும் ராகுல்

தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்கிறார்.

2. முதலமைச்சரின் பிஆர்ஓ நானா?

சென்னை: முதலமைச்சரின் பிஆர்ஓ என தன்னை ஸ்டாலின் கூறியதற்காக பெருமைப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

3. 8,000 கோடி ரூபாயில் சொகுசு விமானம் வாங்கிய மோடி!

நெல்லை: ஜிஎஸ்டி பணம் 15,000 கோடி ரூபாயை திருப்பி கொடுக்காத மோடி 8,000 கோடி ரூபாயில் சொகுசு விமானம் வாங்கியுள்ளதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

4. ஊழல் செய்ததால் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர் செந்தில்பாலாஜி!

கரூர்: அதிமுகவில் இருந்த போது ஊழல் செய்ததால்தான் செந்தில்பாலாஜி விலக்கி வைக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

5. அஞ்சல் வாக்குக்கு 7,300 நபர்களுக்கு அனுமதி - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னையில் 7,300 நபர்களுக்கு அஞ்சல் வாக்கு வழங்கப்பட்டது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


6. துபாய்க்கு 1.03 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் கடத்த முயன்றவர் கைது!

ஹைதராபாத்: விமான நிலையத்தில் 1.03 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்துடன் வந்த நபரை சுங்கத் துறை அலுவலர்கள் அதிரடியாகக் கைதுசெய்தனர்.

7. புதுச்சேரியில் 4 மாதங்களுக்குப் பிறகு 100ஐ கடந்த கரோனா பாதிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது.

8. நெருங்கும் பேரவைத் தேர்தல்: தவறான தகவல் பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ட்விட்டர்!

டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ட்விட்டரில் தவறான தகவல் பரப்புவோர் வன்முறையைத் தூண்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

9. ’படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சி செய்தோம்’ - சுல்தான் படத் தயாரிப்பாளர்

ட்ரீம் வாரியர் பிக்ஷர்ஸ் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், கே.ஜி.எஃப். வில்லன் ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (மார்ச் 24) நடைபெற்றது. இதில் படத்தின் கார்த்தி, ராஷ்மிகா, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

10. கோவிட்-19 மையமாக மாறிய பிரேசில்: ஒரேநாளில் 3,000-க்கும் மேல் உயிரிழப்பு

கோவிட்-19 பெருந்தொற்றின் புதிய மையமாக பிரேசில் உள்ளதாக சர்வதேச பெருந்தொற்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details