தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5pm - 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்

Top 10 News @ 5 Pm
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5pm

By

Published : Aug 21, 2021, 5:02 PM IST

செப்டம்பரில் பள்ளிகள் திறப்பது உறுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

'தொடரும் தற்கொலை - ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை விரைவில் இயற்றுங்கள்'

தற்கொலைகள் தொடர்ந்துகொண்டிருப்பதால் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை விரைவாக இயற்றுமாறு மாநிலங்களவை உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி கோரிக்கைவிடுத்துள்ளார்.

பாரம்பரிய ஊஞ்சலில் ஆடி ஓணம் கொண்டாடிய சசி தரூர் எம்பி!

திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர், இன்று தனது குடும்பத்துடன் கேரளாவின் பாலக்காட்டில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடினார்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வரவேற்க வேண்டும்- ப.சிதம்பரம் ட்வீட்

இந்தியாவின் நல்ல எதிர்காலத்திற்காக 19 எதிர்க்கட்சிகள் இணைந்துள்ளதை வரவேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பர் ட்வீட் செய்துள்ளார்.

ஆப்கனில் 150 இந்தியர்கள் கடத்தல்?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேறக் காத்திருந்த 150 பேரை தாலிபான்கள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 ஆண்டுகளாக பறவைகளின் பசியாற்றிய 'சித்ரா'

நடிகை சித்ரா, கடந்த 15 ஆண்டுகளாக பறவைகளுக்கு உணவு அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். பறவைகளுக்காக வெளியூர் செல்வதையும் தவிர்த்துவந்தார்.

ரஜினி, கமலுடன் தொடங்கிய பயணம்...வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை - சித்ராவின் திரைவாழ்வு!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சித்ரா, தன் முதல் படத்திலேயே தமிழின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன் இருவருடனும் அறிமுகமாகியுள்ளார்.

மலேசியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு!

மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் பொறுப்பேற்றுள்ளார்.

ஆப்கனில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் - ஐ.நா. சபை

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பி, மனித உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என ஐநா சபையின் வளர்ச்சிக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:உடலினை உறுதி செய் - முதலமைச்சரின் மாஸ் வொர்க்-அவுட் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details