தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @3PM

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்...

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 23, 2021, 3:06 PM IST

1. 'கருணாநிதியின் இதயத்திலே ஆசனம்போட்டு அமர்ந்திருந்தவர் துரைமுருகன்'

கருணாநிதியின் பக்கத்திலே அல்ல; அவரது இதயத்திலே ஆசனம்போட்டு அமர்ந்திருந்தவர்தான் துரைமுருகன். அப்படிப்பட்ட இடம் அனைவருக்கும் கிடைத்திடாது எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

2. எனக்கு எல்லாமுமே கருணாநிதிதான் - கண்கலங்கிய துரைமுருகன்

தன் தலைவர் அவர்தான்; தன் வழிகாட்டி அவர்; தனக்கு எல்லாமுமாக இருந்தவர் கருணாநிதி எனக் கண்ணீர் மல்க குறிப்பிட்டார் துரைமுருகன்.

3. பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்

பள்ளிகள் திறந்த பிறகு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாவட்டம்தோறும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

4. திமுக கொடி கம்பம் நட்ட சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம்: திமுக கொடி கம்பம் நட்ட 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

5. சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் கரோனா மூன்றாம் அலை உச்சம் பெறலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது.

6. எம்ஜிஆரிடத்தில் அன்பும், பற்றும் கொண்டவர் துரைமுருகன் - ஓபிஎஸ்

'அனைத்து ஆற்றல்களும் கொண்ட துரைமுருகன் 50 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளவர். அவருக்கு அதிமுகவின் இதயம் கனிந்த வாழ்த்துகள்' என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், எம்ஜிஆர் இடத்தில் அன்பும் பற்றும் கொண்டவர் துரைமுருகன் எனவும் கூறினார்.

7. பானிபூரில சிறுநீரா? - அதிர்ச்சி வீடியோ

கெளஹாத்தியில் பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் சிறுநீரை உரிமையாளர் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8. ராக்கிக்கு பதில் கல்லீரல்... ரக்‌ஷா பந்தன் நாளில் தம்பியின் உயிர்காத்த சகோதரிகள்!

ரக்‌ஷா பந்தன் நாளான நேற்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் தங்களது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்கி, தங்கள் உடன் பிறந்த தம்பியின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

9. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தைக் காண்போம்

10. காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவு!

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகிவந்த ’காசேதான் கடவுளடா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details